மகிழ்ச்சி செய்தி: டெல்லியில் குறைந்த கொரோனா.. பாசிட்டிவ் ரேட் 1% கீழ் குறைவு.!

டெல்லியில் குறைந்து வருகிறது கொரோனா,புதிய பாதிப்பு 648 ஆக பதிவு – டெல்லி அரசு தகவல் .
டெல்லியில் முழு ஊரடங்கு அமலுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் கனிசமாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 648 பேர் கொரோனாவல் புதிதாக பாதிப்படைந்துள்ளனர். மேலும் 86 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் கொரோனா பாசிட்டிவ் ரேட் 0.99 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவரை டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,26,240 பேராக அதிகரித்துள்ளது, மேலும் இன்று மட்டும் 1,622 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை 13,90,963 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது டெல்லியில் உள்ள கொரோனா வார்டில் 11,040 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் இன்று மட்டும் 65,240 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என டெல்லி அரசு தெரிவித்துள்ளது
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025