பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி-மேகன் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தை..!

- இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
- இந்த குழந்தைக்கு லில்லி டயானா என்று பெயரிட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகை மேகனை காதலித்து குடும்பத்தின் ஒப்புதலோடு 2018-இல் திருமணம் செய்துகொண்டார். இருந்தாலும் அரச குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி கடந்த ஆண்டு அறிவித்தார். அதனால், இவர்கள் இருவரும் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு 2 வயதில் ஆர்ச்சி என்ற மகன் இருக்கிறான். தற்போது மேகன் இரண்டாவதாக பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த குழந்தை கலிபோர்னியாவில் உள்ள சான்டா பார்பரா காட்டேஜ் மருத்துவமனையில் ஜூன் 4 அன்று ஆரோக்கியத்துடன் பிறந்துள்ளது. இந்த செய்தியை இளவரசர் ஹாரியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த பெண் குழந்தைக்கு இளவரசர் ஹாரி மற்றும் இளவரசி மேகன் இருவரும், ராணி எலிசபெத் மற்றும் ஹாரியின் தாயார் டயானா ஆகியோர் பெயரை சேர்த்து லில்லி டயானா என்று பெயர் வைத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025