#Breaking: “திமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகிறது;அதற்கான தயாரிப்பு கூட்டம் நாளை நடைபெறும்” – துரைமுருகன்..!

திமுக உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிறது;அதற்கான தயாரிப்பு கூட்டம் நாளை நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் நடத்தி, அதன் முடிவுகளை அறிவிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து,சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.பின்னர், உள்ளாட்சித் தேர்தல் பணிகளை முடிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் தனி அலுவலர் பதவி காலம் நீட்டிக்கபடுவதாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில்,திமுக உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிறது,அதற்கான தயாரிப்பு கூட்டம் நாளை நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேலும்,இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
“கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில்,தி.மு.க.மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 25-06-2021 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும்.
அக்கூட்டத்தில்,மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025