ஆட்டுக்கறிக்காக மணமகளை விட்டுட்டு வேறொரு பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகன்..!

விருந்தில் ஆட்டுக்கறி வைக்காத காரணத்தால் மணமகன் வேறொரு பெண்ணுக்கு தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஒடிசா மாநிலம் ஜஜ்பூரை சேர்ந்த ராம்காந் பத்ரா(27) என்பவருக்கு சுகிந்தா என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பெரியவர்கள் முன்னிலையில் நிச்சயம் நடந்துள்ளது. கடந்த புதன் கிழமையன்று திருமணம் நடைபெறுவதாக இருந்துள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு முதல் நாள் பெண் வீட்டார் விருந்து வைக்கும் பொழுது, அதில் ஆட்டுக்கறி இல்லாத காரணத்தால் மாப்பிளை வீட்டாரில் உள்ளோர் சண்டையிட ஆரம்பித்துள்ளனர்.
பொறுத்திருந்த பெண் வீட்டாரும் பின்னர் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் பிரச்னை குறித்து மணமகனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மணமகன் அங்கிருந்து வெளியேறி வேறொரு உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறார். பின்னர், பெண் வீட்டார் ஆட்டுக்கறி வைக்காமல் இருந்த தவறுக்கு அவர்களை பழிவாங்க அதே இரவில் புல்ஜாராவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தாலி கட்டியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், இது குறித்து பெண் வீட்டார் காவல்துறையில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025