துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் நடிக்க இருந்தது யார் தெரியுமா..?

துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வால் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க நடிகை தீபிகா படுகோண் தான் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வசூல் அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் என்றே கூறலாம். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 100கோடிக்கு மேல் வசூல் செய்தது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க நடிகை தீபிகா படுகோனிடம் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டாராம். அதற்க்கு பின் கால்ஷீட் இல்லாத காரணத்தால் அவரால் நடிக்கமுடியாமல் போய்விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!
June 20, 2025