மகாராஷ்டிர மாநிலத்தில் வெள்ளபாதிப்பால் உயரும் பலி எண்ணிக்கை..!-251 ஆக அதிகரிப்பு..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 251 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100 பேரை காணவில்லை.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பெரிதளவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர் மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தற்போது கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 100 பேர் காணாமல் போய் உள்ளனர். இந்த மழையில் சிக்கி இதுவரை 25,581 விலங்குகள் உயிரிழந்துள்ளது.
மேலும், இந்த வெள்ளப்பாதிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இதுவரை 2,30,000 பேர் வரை முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை தங்க வைப்பதற்காக 259 சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025