பாரத் நெட் திட்டத்தில் கிராமங்களுக்கு இண்டெர்நெட் வசதி – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பாரத் நெட் திட்டத்தில் கிராமங்களுக்கு இண்டெர்நெட் வழங்கப்படும் என தமிழக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், பாரத் நெட் திட்டத்தில் கிராமங்களுக்கு இண்டெர்நெட் வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அதனடிப்படையில், தகுதிவாய்ந்த ஊராட்சி அமைப்புகளுக்கு அகண்ட அலைவரிசை இணைப்பு பாரத் நெட் மூலம் வழங்கப்படும் என்றும், 12,525 லிராமங்களுக்கு 1 ஜிபிஎஸ் அளவில் அலைவரிசை இணைப்பு கண்ணாடி இழைவடம் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025