எம்.எல்.ஏ-க்களுக்கு புத்தாக்க, கணினி பயிற்சி – சபாநாயகர் அப்பாவு

எம்.எல்.ஏ-க்களுக்கு புத்தாக்க, கணினி பயிற்சி வழங்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இந்த கூட்டத்தில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யட்டது. இதனை தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த சட்டப்பேரவை கூட்டமானது செப்டம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய சபாநாயகர் அப்பாவு, சென்னை சேப்பாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் விடுதியில் மாலை 4 மணிக்கு, எம்.எல்.ஏ-க்களுக்கு வரும் திங்கள், செவ்வாய்கிழமைகளில் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் என்றும், புதன் வெள்ளி வரை கணினி பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025