அட இப்படி ஒரு ஞாபக சக்தியா…? கின்னஸ் சாதனை படைத்த சென்னை சிறுமி…!

ஒரே நிமிடத்தில் 68 ஆங்கில எழுத்து வடிவங்களை கூறி சனா ஸ்ரீ கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சென்னையில் வசிக்கும், கலால் வரித்துறையின் கூடுதல் ஆணையர் சமய முரளி. இவரது மகள் தான் 8 வயது நிரம்பிய சனாஸ்ரீ. இவர் ஆங்கில எழுத்துக்களின் வெவ்வேறு வடிவங்களை கண்டறிந்து சாதனை படைக்க, நீண்ட நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி, ஒரே நிமிடத்தில் 68 ஆங்கில எழுத்து வடிவங்களை கூறி சனா ஸ்ரீ கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து அவரது தாய் பிரவீனா கூறுகையில், கொரோனா ஊரடங்கால் குழந்தைகள் வீட்டிலேயே முடங்கி கிடந்த நிலையில், ஒய்வு நேரங்களை பயனுள்ள வகையில் மாற்றும் நோக்கில் பயிற்சி அளித்ததில் பலனாக, தனது குழந்தை இந்த சாதனையை படைத்ததாக கூறியுள்ளார்.
இதற்க்கு முன்னதாக ஒரு நிமிடத்தில் 37 எழுத்து வடிவங்களை கூறி கின்னஸ் சாதனை படைத்திருந்தனர். இந்த சாதனையை சனா ஸ்ரீ முறியடித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025