விக்ரம் படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்.! நெகிழ்ச்சி பதிவு.!

விக்ரம் படத்தில் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு முடித்து விட்டு படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில், வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளது. இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது குறித்து அவரது பதிவில் “விக்ரம் படத்தில் நடன இயக்குனராக பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சாருக்கு நன்றி…இந்தப் படம் நிச்சயமாக என் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக இருக்கும்..உங்களுடன் பணிபுரிவது ஒரு அற்புதமான கற்றல் அனுபவம்..” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
இந்த திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025