மேற்கு வங்க இடைதேர்தல் : 28,825 வாக்குகள் கூடுதலாக பெற்று மம்தா முன்னிலை!

இன்று நடைபெறும் மேற்கு வங்க இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் தொகுதியில் 28,825 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.
கடந்த மே மாதம் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில், முதல்வராக பதவியேற்ற 6 மாதத்திற்குள் எம்எல்ஏவாக பதவி ஏற்காத பட்சத்தில் முதல்வர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி இறங்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்எல்ஏவும், வேளாண் அமைச்சரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பவானிபூர் தொகுதியில் நடைபெற்ற இடை தேர்தலில் பாஜக சார்பில் பிரியங்கா திப்ரே மம்தா பானர்ஜிக்கு எதிராக போட்டியிட்டார். இன்று இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதற்கு முன் இரு முறை பவானிபூரில் மம்தா பானர்ஜி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், தற்போதும் ஒன்பது சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் 28,825 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். இதனையடுத்து கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் குடியிருப்புக்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் ஆட்டம் பாட்டத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025