10 நாள் தனிமைப்படுத்தலை கடைபிடிக்க சொன்னதால் காமன்வெல்த் விளையாட்டில் இருந்து விலகிய இந்திய ஹாக்கி அணி …!

10 நாள் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க கூறியதால், இங்கிலாந்தில் நடைபெற இருந்த காமன்வெல்த் விளையாட்டில் இருந்து இந்திய ஹாக்கி அணி விலகியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் அடுத்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் தெரிவித்துள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி தகுதி சுற்று ஆசிய விளையாட்டில் கவனம் செலுத்துவதற்காக ஹாக்கி வீரர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளனர்.
இருப்பினும் இந்திய அணியினர் இங்கிலாந்தில் விளையாட வரும் பொழுது கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்தலை கடைபிடிக்க வேண்டும் என்ற கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், இந்த விளையாட்டில் இருந்து விலகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகும் முடிவை போட்டி அமைப்பாளர்களுக்கு முன்னமே தெரிவித்து விடுமாறும் ஹாக்கி இந்தியா அமைப்பு சார்பில் அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025