குயின்ஸ்லேண்ட் ரிசார்ட்டை உயர்நீதிமன்றம் உத்தரவு!

குயின்ஸ்லேண்ட் ரிசார்ட்டை அகற்ற இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
கோயில் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குயின்ஸ்லேண்ட் ரிசார்ட்டை அகற்ற அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 வாரங்களில் அப்புறப்படுத்த அறநிலையத்துறைக்கு ஆணையிட்டுள்ளது.
குத்தகைய காலம் முடிந்த பின் நிலத்தை ஆக்கிரமித்து இருந்ததற்காக ரூ.9.5 கோடி வசூலிக்கவும், இதனை பூந்தமல்லி காசிவிஸ்வநாதர், வேணுகோபால் கோயில் நிர்வாகங்களுக்கு அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
வருவாய்துறைக்கு ரூ.1.08 கோடி வழங்க வேண்டும் என்றும் குயின்ஸ்லேண்ட் நிர்வாகத்திற்கு 21 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தியதற்காக ரூ.2.75 கோடி செலுத்த வட்டாச்சியர் உத்தரவிட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025