பட்டாசு விபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!

கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சமும், தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ரூ.1 லட்சமும் முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவர் கடையின் மாடியில் தீபாவளி விற்பனைக்காக, சேகரித்து வைத்திருந்த பட்டாசுகள் நேற்று இரவு 7 மணி அளவில் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகில் இருந்த பேக்கரியில் 2 கேஸ் சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட விபத்தில்ஊழியர்கள் மற்றும் கடை அருகே பூ விற்றுக் கொண்டிருந்தவர் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். காயமடைந்த 25 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக ஐவர் உயிரிழந்தனர் என அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சமும்; தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ரூ.1 லட்சமும் #CMRF நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
— M.K.Stalin (@mkstalin) October 26, 2021
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக ஐவர் உயிரிழந்தனர் என அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சமும்; தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ரூ.1 லட்சமும் #CMRF நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!
July 24, 2025