நீலகிரி மாவட்ட ஆட்சியராக எஸ்.பி.அம்ரித் நியமனம்..!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பணியிட மாற்றம் புதிய ஆட்சியராக எஸ்.பி.அம்ரித் நியமனம்.
நீலகிரி மாவட்ட ஆட்சியராக கடந்த 2017-ம் ஆண்டு இன்னசென்ட் திவ்யா பொறுப்பேற்றார். இவர் பொறுபேற்ற பிறகு பொதுமக்களிடையே அவரது பணிக்கு வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையில் கடந்த 2019-ஆம் ஆண்டு இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற அனுமதியில்லாமல் அவரை இடமாற்றம் செய்யக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் இடைக்கால மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது.
அதில், நிர்வாகரீதியிலான பணிகளை மேற்கொள்ள இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்வது அவசியமாகிறது என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் கடந்த 16-ஆம் தேதி அனுமதி வழங்கியது. இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பணியிட மாற்றம் புதிய ஆட்சியராக எஸ்.பி.அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 30, 2025