#BREAKING : தமிழகத்தில் டிச.15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு..!

தமிழகத்தில் டிச.15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் டிச.15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு – கேரளா இடையே பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.தடுப்பூசி செலுத்தினாலும் கொட்டிட பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025