ஹெலிகாப்டர் விபத்து – மத்திய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் மௌன அஞ்சலி..!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரழந்த பிபின் ராவத் உள்ளிட்ட அனைவருக்கும் மத்திய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய விமான படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து, பாதுகாப்பிற்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் மாலை 6.30 மணிக்கு தொடங்கியது.
இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒரு மணி நேரம் நடைபெற்ற நிலையில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில், விபத்தில் உயிரழந்த பிபின் ராவத் உள்ளிட்ட அனைவருக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.