முதல்வரை சந்தித்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்!

சென்னை:முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில்,இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் ரகுராம் ராஜன் அவர்கள் இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொருளாதார ஆலோசனைகள் வழங்க ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்கள் தலைமையில் ஐவர் அடங்கிய பொருளாதார ஆலோசனைக் குழுவை தமிழக அரசு முன்னதாக அமைத்தது.
இந்நிலையில்,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (13.12.2021) தலைமைச் செயலகத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் ரகுராம் ராஜன் அவர்கள் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது,நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் ம வெ. இறையன்பு,நிதித்துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!
July 8, 2025
“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!
July 8, 2025