புத்தாண்டின் முதல் நாளில் பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் என்ன தெரியுமா?..!

சென்னை:58-வது நாளாக எந்தவித மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது கணிசமாக குறைந்தாலும் பெட்ரோல்,டீசல் விலையானது ஏற்றமாகவே உள்ளது. இதன்காரணமாக,பெட்ரோல்,டீசல் விலையேற்றம் என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக கருதப்படுகிறது.இதனால்,பெட்ரோல்,டீசல் விலை மேலும் குறைக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில்,ஆங்கிலப் புத்தாண்டு தினமான இன்றும் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.58-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
இதற்கிடையில்,பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை,நடுத்தர மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க,வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினம் முதல் ஜார்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025