“இதுவே நம் ஒவ்வொருவரின் பலம்;நாம்தான் இதன் பாதுகாவலர்கள்” – ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்!

நமது நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு,இந்திய அரசியலமைப்புச் சட்டமே நம் ஒவ்வொருவரின் பலம் எனக் கூறி,மக்கள் அனைவருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நமது இந்திய நாட்டின் 73-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்,குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெற்றது.
ஆனால்,கொரோனா பரவல் காரணமாக,பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இதற்கிடையில்,மக்கள் அனைவருக்கும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,குடியரசு தினத்தை முன்னிட்டு,இந்திய அரசியலமைப்புச் சட்டமே நம் ஒவ்வொருவரின் பலம் எனக் கூறி,மக்கள் அனைவருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்,அவர் கூறியிருப்பதாவது:
“இந்திய அரசியலமைப்புச் சட்டமே நம் ஒவ்வொருவரின் பலம்.நாம்தான் இதன் பாதுகாவலர்கள் என்பதை உணர்வோம்.அரசியலமைப்பு நமக்கு வழங்கி இருக்கும் சுதந்திரத்தின்,அதிகாரத்தின்,உரிமைகளின் உண்மையான மதிப்பை அறிந்து ஒற்றுமையுடன் கடமையாற்றுவோம்.குடியரசு தின நல்வாழ்த்துக்கள்”,என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டமே நம் ஒவ்வொருவரின் பலம். நாம்தான் இதன் பாதுகாவலர்கள் என்பதை உணர்வோம். அரசியலமைப்பு நமக்கு வழங்கி இருக்கும் சுதந்திரத்தின், அதிகாரத்தின், உரிமைகளின் உண்மையான மதிப்பை அறிந்து ஒற்றுமையுடன் கடமையாற்றுவோம். குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 26, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025