#BREAKING : சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி..!

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸால், அரசியல், சினிமா, பிரபலங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் என முக்கிய பணியில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று செய்யப்பட்டதையடுத்து, அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!
July 26, 2025