#BREAKING: சென்னை மக்களுக்கு நற்செய்தி.., கடற்கரை செல்ல அனுமதி!

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் சென்னையில் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பிப்ரவரி 1 முதல் சென்னையில் உள்ள கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட இரவு ஊரடங்கு , முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடற்கரையில் கூட்டமாக கூடக் கூடாது. மாஸ்க் அணிந்து விதிகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என மாநகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!
July 28, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025