பெட்ரோல்,டீசல் விலை – இன்றைய நிலவரம் இதோ!

சென்னை:89-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
ஆனால்,கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வரும் நிலையில்,89-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும், அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
தற்போதைய,கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பெட்ரோல்,டீசல் விலை நீண்ட நாட்களாக உயர்த்தப்படவில்லை என்றாலும்கூட,மேலும்,குறைக்கப்பட வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த நிலையில்,நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.அப்போது,பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு ஏதேனும் வெளியாகுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025