#Breaking:போரில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் – உக்ரைன் அறிவிப்பு!

ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிவிப்பு.
நேற்று காலை முதல் உக்ரைன் மீது ரஷ்யா,தரைப்படை மற்றும் வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில், உக்ரைன் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 130-க்கும் மேற்பட்டோர் நேற்று உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து,இன்றும் உக்ரைன் தலைநகர் கிவ்வை குறிவைத்து தாக்கும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.அந்த வகையில்,40 நிமிடங்களில் கிவ் மீது 36 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்நிலையில்,ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும்,ரஷ்யாவின் 30 பீரங்கி டாங்கிகள்,7 விமானங்கள் மற்றும் 6 ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!
July 30, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 30, 2025