அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை..!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்நெருங்கி வருவதையடுத்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்நெருங்கி வருவதையடுத்து, பிரச்சாரம், பேரணி, கூட்டம் நடத்துவதற்கான கட்டுப்பாடுகள், நட்சத்திர பேச்சாளர்கள் எண்ணிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025