வேளாண் பட்ஜெட் தாக்கல் – ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்க நடவடிக்கை

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று 2022-23- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை கொண்டுவரப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு முதன் முறையாக தமிழக அரசு சார்பில் வேளாண்துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது முறையாக தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான தனி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு
இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், விளை நிலங்களில் ட்ரோன் மூலம் பூச்சிமருந்துகள் தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விதை முதல் விளைச்சல் வரை தொழில்நுட்பங்களை மின்னனு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னணு முறை
திட்டங்களில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க படிப்படியாக கணினி வழியே பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உற்பத்தி முதல் விற்பனை வரை சேவைகளை, விதை முதல் விளைச்சல் வரை தொழில்நுட்பங்களை முழுமையாக மின்னணு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.