தமிழகத்திற்கு எதிராக கர்நாடகா தீர்மானம் நிறைவேற்ற முடிவு..?

மேகதாது அணைக்கு எதிராக தமிழகம் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அதற்க்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகா பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு.
மேகதாது அணை விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனி தீர்மானத்தை நேற்று முன்மொழிந்தார். இதற்கு அனைவரும் ஒப்புதல் அளிக்கவே சட்டப்பேரவையில் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையில், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக சட்டசபையில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக சட்டத்திற்கு புறம்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தின் உரிமையை ஆக்கிரமிக்கலாம் என்பது மக்கள் விரோத முடிவு. இந்த முடிவை கர்நாடக அரசும்,மக்களும் வன்மையாகக் கண்டிக்கின்றனர் என பதிவிட்டார்.
இந்நிலையில்ம், மேகதாது அணைக்கு எதிராக தமிழகம் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அதற்க்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகா பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025