#JustNow: தமிழகத்தில் இனி கொரோனா வார தடுப்பூசி முகாம் இல்லை – மருத்துவத்துறை

இனி வாரந்தோறும் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவிப்பு.
தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதற்கேற்ப தேவைப்பட்டால் அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மெகா தடுப்பூசி முகாமை நடத்தலாம் என்றும் தமிழகத்தில் இதுவரை 27 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், கொரோனா பரவல் குறைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் இதுவரை 92% பேர் முதல் தவணை தடுப்பூசி, 73% பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட முகாம்களால் தமிழகத்தில் சுமார் 4 கோடி பேர் பயனடைந்துள்ளதாகவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
July 26, 2025
திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!
July 26, 2025