கனடாவில் உயிரிழந்த மகனின் கல்விக்கடனை ரத்து செய்யுமாறு தந்தை கோரிக்கை…!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் எனும் மாணவர் கனடாவில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு மேலாண்மை படிப்பு பயின்று வந்துள்ளார். இவர் சுரங்கப்பாதை ஒன்றின் வழியாக செல்லும் பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும், தனது மகன் எப்படி உயிரிழந்தான் என்பது தெரியவில்லை, கனடா மிக பாதுகாப்பான நாடு என தனது மகன் கூறி வந்ததாக உயிரிழந்த மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்பொழுதும் இது குறித்து பேசியுள்ள உயிரிழந்த கார்திக்கின் தந்தை ஜிதேஷ் வாசுதேவ் தனது மகனின் படிப்புக்காக வாங்கிய கல்விக்கடனை தள்ளுபடி செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025