#JustNow: ICT தேசிய விருது.. ஆசிரியர்கள் கவனத்திற்கு – மத்திய கல்வி அமைச்சகம் முக்கிய அறிவிப்பு

Default Image

தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுக்கு ஆசிரியர்கள் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு.

2020-21-ம் ஆண்டுகளுக்கான (NATIONAL ICT AWARDS) தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் விருதுக்கு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் https://ictaward.ncert.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வரும் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வியில் ஐசிடியை (Information and Communication Technology) பெரிய அளவில் பயன்படுத்த ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய கல்வி அமைச்சகத்திற்கு தேவையான எண்ணிக்கையிலான விருது பெற்றவர்களின் குறுகிய பட்டியல் மற்றும் பரிந்துரைகளுக்கு முறையான தேர்வு செயல்முறை பின்பற்றப்படுகிறது. இதற்காக 36 ஐசிடி விருதுகள் அரசால் நிறுவப்பட்டுள்ளன. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் எட்டு தன்னாட்சி அமைப்புகளில் பள்ளி பாடத்திட்டம் மற்றும் பாடம் கற்பித்தல் ஆகியவற்றில் தொழில்நுட்ப ஆதரவை திறம்பட மற்றும் புதுமையாக ஒருங்கிணைத்து மாணவர்களின் கற்றலை மேம்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை கவுரவிப்பதற்கு இந்த விருது வழங்கப்படுகிறது. primary, upper primary, secondary, higher secondary பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்படுவதற்குத் தகுதியுடையவர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir