அதிமுக – பாஜக கூட்டணி, ஆடியோ விவகாரம், கோடநாடு வழக்கு – அமித்ஷாவை சந்தித்த பின் இபிஎஸ் பரபரப்பு பேட்டி

எல்லாத்தையும் கேட்டுவிட்டு அப்படியே செல்வதற்கு அதிமுக அடிமைக்கட்சி கிடையாது என இபிஎஸ் பேட்டி.
டெல்லியில் பாஜக தேசியா தலைவர் ஜேபி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சம்பிரதாயப்படி உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி ஆகியோரை சந்தித்து பேசினோம்.
அதிமுக – பாஜக கூட்டணி:
அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எங்களுக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் எந்த தகராறும் இல்லை. அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த நினைக்கின்றனர். எல்லாத்தையும் கேட்டுவிட்டு அப்படியே செல்வதற்கு அதிமுக அடிமைக்கட்சி கிடையாது.
நீதிமன்றம் உத்தரவு:
பாஜகவையும், அதிமுகவையும் திட்டமிட்டு பிரிக்க நினைக்கின்றனர். தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் அதிமுக விவகாரத்தில் தெளிவான உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதிமுகவும், இரட்டை இலையும் சின்னமும் எங்கள் பக்கம் தான் உள்ளன. நீதிமன்றமும் தெளிவாக்க சொல்லியுள்ளது.
ஆடியோ விவகாரம்:
அந்தந்த கட்சிகளின் கொள்கைகளின் அடிப்படையில் அவரவர்கள் செயல்படுகின்றனர். ஒற்றுமையாக செயல்பட்டு எங்கள் கூட்டணியை வெற்றி பெற செய்வோம் என தெரிவித்தார். இதன்பின் பேசிய அவர், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக பரவும் ஆடியோ விவகாரத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். நிதி அமைச்சர் பேசிய ஆடியோ விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
சிஏஜி அறிக்கை:
ஆடியோ விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மைத்தன்மை குறித்து ஆராய வேண்டும், முறையான விசாரணையை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக கூறினார். ஆடியோ விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். டெண்டர் முறைகேடு நடைபெற்றதாக சிஏஜி அறிக்கை கூறவில்லை, அதிமுக ஆட்சியில் அனைத்தையும் சிறப்பாக கையாண்டுள்ளோம். அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை என விளக்கமளித்தார்.
கோடநாடு விவகாரம்:
கோடநாடு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை ஜாமீன் எடுத்தது திமுகா தான். கோடநாடு கொலை மாற்றும் கொள்ளை வழக்கில் அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்து விசாரித்தது. கோடநாடு வழக்கில் குற்றவாளினிகளுக்கு ஆதரவாக திமுக செயல்படுகிறது எனவும் தெரிவித்தார். மேலும், அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்களை தவிர மற்றவர்கள் வந்தால் கட்சியில் சேர்ப்போம். திமுகவின் பி அணியாக ஓபிஎஸ் இன்னும் செயல்பட்டு வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025