மணிப்பூர் முதல்வர் திறந்து வைக்க இருந்த உடற்பயிற்சி கூடம் தீ வைத்து எரிப்பு.! நகரில் 144 தடை உத்தரவு.!

N Biren Singh

மணிப்பூர் மாநில முதல்வர் திறந்த்து வைக்க இருந்த உடற்பயிற்சி கூடம் மர்ம நபர்களால் தீவைத்து கொளுத்தப்பட்டன. 

மணிப்பூர் மாநிலத்தின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் அப்பகுதியில் புதியதாக ஓர் உடற்பயிற்சி கூடத்தை திறக்க இருந்தார். ஆனால் முதல்வர் திறக்க வருவதற்கு முன்னரே சில மர்ம நபர்கள் அந்த உடற்பயிற்சி கூடத்திற்கு தீ வைத்து எரித்துவிட்டனர்.

பாஜக தலைமையிலான மாநில அரசானது, ஒதுக்கப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் சதுப்பு நிலங்கள் பற்றிய கணக்கெடுப்புக்கு அப்பகுதி பூர்வ குடிமக்கழ  தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால் இந்த உடற்பயிற்சி கூடத்திற்கு அவர்கள் தான் தீ வைத்தார்களா என்ற கோணத்தில் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தீ வைப்பு சம்பவத்தை அடுத்து, அப்பகுதி இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, சுராசந்த்பூரில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீ வைப்பு சம்பவத்தில் உடற்பயிற்சி கூடத்தின் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள்  தீயிட்டு கொளுத்தப்பட்டன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Ranya Rao
Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc