இந்தியாவில் ஒரே நாளில் 7,171 பேருக்கு கொரோனா..! 40 பேர் உயிரிழப்பு..!

India Corona

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,171 பேருக்கு கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைளை பொதுமக்கள்கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 7,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 7,533 ஆக அதிகரித்திருந்த கொரோனா தொற்று இன்று 7,171 ஆக சற்று குறைந்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53,852 லிருந்து 51,314 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், பலி எண்ணிக்கை 5,31,468 லிருந்து 531508 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,43,47,024 லிருந்து 4,43,56,693ஆக உயர்ந்துள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 220,66,63,094 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 3,875 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்