சிறை காவலர் தீக்குளிப்பு – எஸ்.ஐ சஸ்பெண்ட்!

SI suspended

சிறைக்காவலர் தீக்குளித்து உயிரிழந்த விவகாரத்தில் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

திருச்சி லால்குடி காவல் நிலைய வாசலில் செம்பரை கிராமத்தை சேர்ந்த சிறைக்காவலர் ராஜா தீக்குளித்து உயிரிழந்த விவகாரத்தில் எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உறவினர்களிடையே ஏற்பட்ட சொத்து பிரச்சனை தொடர்பாக சரியாக விசாரணை நடத்தவில்லை என கூறி சிறை காவலர் ராஜா தீக்குளித்ததாக கூறப்படுகிறது.

தீக்குளித்த சிறை காவலர் ராஜா, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறை காவலர் ராஜா தீக்குளித்த நிலையில், புகாரை சரிவர விசாரிக்கவில்லை என எஸ்ஐ பொற்செழியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருச்சி எஸ்பியின் பரிந்துரையின் பேரில் எஸ்ஐயை சஸ்பெண்ட் செய்து டிஐஜி சரவணசுந்தர் உத்தரவிட்டார்.

இதனிடையே, தனது சகோதரர், மனைவிம், மகள் தான் தனது மரணத்திற்கு காரணம் என உயிரிழந்த சிறைக்காவலர் ராஜா வாக்குமூலம் அளித்துள்ளதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்ஐ பொற்செழியன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்