ரோஹித் சர்மா அவுட் இல்லை…கொந்தளிக்கும் ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ.!!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று தனது36-ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். நேற்று ஐபிஎல் சீசனிகளில் 1000-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இறுதியாக அதிரடியாக விளையாடிய மும்பை அணி வெற்றிபெற்று 1000-வது ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்தது. ஆனாலும், நேற்று ரோஹித் சர்மா பிறந்தநாள் என்பதால் அவர் நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி நிறைய ரன்கள் குவிப்பார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தார்கள்.
எதிர்பாராத விதமாக ரோஹித் சர்மா 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்நிலையில், நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா அவுட் குறித்து வலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது. சந்தீப் சர்மா பந்துவீச்சில் ரோஹித் போல்டு ஆனார். ஆனால், பந்து ஸ்டம்பில் படாமல், கீப்பரின் கையுறை பட்டதால் பெயில் விழுந்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Well Well Well! We have another controversy in this game. Did the ball remove the bails or it was Sanju Samson’s gloves that flicked them? Why did Rohit Sharma not review it? #MIvsRR #IPL2023 pic.twitter.com/Ri84aHF0wM
— Ridhima Pathak (@PathakRidhima) April 30, 2023
மேலும், பந்து பெயிலைத் தாண்டி செல்லும் போதுதான் விளக்குகள் எரிந்தது. இதனால் ரோஹித் அவுட் இல்லை என அவருடைய ரசிகர்கள் பலரும் கோபத்துடன் பதிவிட்டு வருகிறார்கள். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
WTF man….
Report krna jaruri tha kya!!!#RohitSharma #MIvsRR #IPL2023 #TATAIPL #rs45wasnotout https://t.co/dFPWBG0Wh4 pic.twitter.com/4pCYEIXO2b— hrishikesh shiralaskar (@hrizhiii) May 1, 2023
Clearly Not Out,Ball is not hitted the stumps,It came from the Samsons Gloves #MIvsRR ,@ImRo45 @mipaltan @BCCI Poor Umpiring pic.twitter.com/9TyYYoP6mE
— Monu Kumar (@imvipink) May 1, 2023