சிவப்பு உடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! மே தின நினைவுச் சின்னத்திற்கு நேரில் மரியாதை.!

சிவப்பு உடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் மே தின நினைவுச் சின்னத்திற்கு நேரில் மரியாதை செலுத்தினார்.
இன்று மே 1 உலகம் முழுக்க உழைப்பாளர் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் முதல், பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உழைப்பாளர் நினைவு சின்னத்திற்கு தனது மரியாதையை நேரில் வந்து செலுத்தினார் .