மாலைகளுக்கு இடம் தரக்கூடாது! – பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை

மாலை அணிவிக்கும் கலாச்சாரத்திற்கு பாமக நிர்வாகிகள் எவரும் இடம் தரக்கூடாது என ராமதாஸ் எச்சரிக்கை.
இதுதொடர்பாக அவரது பதிவில், பாட்டாளி மக்கள் கட்சி நிகழ்ச்சிகளில் மாலைகளுக்கு இடம் கிடையாது. மாலை அணிவிக்கும் கலாச்சாரம் பாட்டாளி மக்கள் கட்சியில் ஒழிக்கப்பட்டு விட்டது. அந்தக் கலாச்சாரம் இப்போது சில இடங்களில் மீண்டும் துளிர்விடுவதாக அறிகிறேன். அது கூடவே கூடாது. மாலை அணிவிக்கும் கலாச்சாரத்திற்கு பா.ம.க. நிர்வாகிகள் எவரும் இடம் தரக்கூடாது என்று எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.