கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Kolkata Knight Riders

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய 47வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் மோதின.டாஸ் வென்ற, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் ஜேசன் ராய் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் களமிறங்கினர்.குர்பாஸ் வந்த வேகத்தில் ஒரு பந்தை மட்டும்சந்தித்து டக் அவுட் ஆகினார்.

ஜேசன் ராய் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க  வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களுக்கு ஆட்டம் இழக்க நிதிஷ் ராணா(42), ரிங்கு சிங்(46),ஆண்ட்ரே ரசல்(24) ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் இதன் விளைவாக கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்களை எடுத்தது.

ஹைதராபாத் அணியில் மார்கோ ஜான்சன் மற்றும் டி நடராஜன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய அபிஷேக் சர்மா 9 ரன்னிற்கும் மயங்க் அகர்வால் 18 ரன்னிற்கும் ஆட்டமிழந்தனர்.ஐடன் மார்க்ரம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 41 எண்களை எடுத்தார்.அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஹென்ரிச் கிளாசென் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது.ஷர்துல் தாக்கூர் மற்றும்  வைபவ் அரோரா தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்