Today’s Live: சிகிச்சைக்கு கட்டணம்: ஜிப்மர் மருத்துவமனையின் அறிவிப்புக்கு எதிராக விசிக போராட்டம்.!

ஜிப்மர் நிர்வாக முடிவுக்கு எதிராக விசிக ஆர்ப்பாட்டம்:
இல்லாதவர்களுக்கு ஆளுமை வழங்குவதுதான் சமூக நீதி, இதனை கொச்சைப்படுத்தி ஆளுநர் ரவி பேசி வருகிறார். கட்டண சிகிச்சை அறிவிப்பை ஜிப்மர் திரும்பப் பெற வேண்டும், இல்லையெனில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் வராதோர், வறுமைக் கோட்டுக்கு கீழ், இல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு கட்டணம் என்ற அறிவிப்புக்கு எதிராக விசிக ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேச்சு.
05.05.2023 05:50 PM
பொறியியல் கலந்தாய்வு தேதி:
பொறியியல் கலந்தாய்வுக்கான உத்தேச தேதி பட்டியலை வெளியிட்டது தொழில்நுட்ப கல்வி இயக்ககம். அதன்படி, தமிழ்நாடு பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கி அக்டோபர் 3ம் தேதி நிறைவு பெறுவதாகவும், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2ம் தேதியும், பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 7ம் தேதியும் தொடங்குகிறது.
05.05.2023 12:50 PM
இருவருக்கு குண்டர் சட்டம்:
தூத்துக்குடி முறப்பநாடு வி.ஏ.ஓ., லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் கைதான ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
05.05.2023 12:50 PM
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025