கட்டுப்பாட்டை இழந்த கார்… 25 அடி கிணற்றில் விழுந்து தந்தை,மகன் பலி.!!

car falls into well

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு சோகமான சம்பவத்தில்,  தந்தை-மகன் இருவரும் இறந்தனர்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் அடுத்த கச்ரோட் பகுதியில் பவன் என்பவர் 3 குழந்தைகளுடன் சென்ற கார், ரிவர்ஸ் எடுக்கும்போது கட்டுப்பாட்டை
இழந்து தண்ணீர் இல்லாத 25 அடி ஆழமுள்ள கிணற்றில் கவிழ்ந்தது.

தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காரில் இருந்தவர்களின் உயிரை காப்பாற்றினர். அவர்கள் கயிறு மூலம் கிணற்றுக்குள் நுழைந்து காரில் இருந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், இந்த துயர சம்பவத்தில் தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே நேரத்தில், பலத்த காயமடைந்த இரண்டு குழந்தைகள் மருத்துவ சிகிச்சைக்காக ரத்லம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து கச்சரோடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கார், ரிவர்ஸ் எடுக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்ததில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்