தயவு செய்து…வீட்டுக்கு வெளியே தண்ணீர் வைங்க…நடிகை ரம்யா கிருஷ்ணன் வேண்டுகோள்.!!

சென்னை மயிலாப்பூரில் தனியார் அறக்கட்டளை சார்பில் தெரு விளக்குகளுக்கு தண்ணீர் வைக்க கிண்ணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரம்யா கிருஷ்ணன் மற்றும் வரலட்சுமி இருவரும் கோடை காலத்தில் பிராணிகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். முதலில் பேசிய ரம்யா கிருஷ்ணன் “வீட்டிற்கு வெளியே ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வையுங்கள் இது மிகவும் சின்ன விஷயம்தான்.

நமக்கு தாகம் எடுத்தால் ஓரிடத்தில் தண்ணீர் வாங்கி குடிக்கலாம். ஆனால் விலங்குகளுக்கு அப்படி இல்லை. தண்ணீர் என அப்படி கேட்கவும் முடியாது. எனவே வீட்டிற்கு வெளியே ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்தால் ஒரு விலங்கின் வாழ்க்கையை காப்பாற்ற முடியும் தயவு செய்து தண்ணீர் வைங்கள்” என்று கூறியுள்ளார்.

அவரை தொடர்ந்து பேசிய வரலட்சுமி ” தயவு செய்து வீட்டிற்கு வெளியே ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைங்கள். நாங்களே 2,500 கிண்ணங்களை கொடுக்கிறோம். அதை வாங்கிக்கொண்டு தண்ணீர் மட்டும் வையுங்கள். இதன் மூலம் எதனை விலங்குகள் பறவைகள் தண்ணீர் குடிக்கும் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்” என கூறியுள்ளார். வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், விலங்குகளுக்கு தண்ணீர் வைக்க இருவரும் அறிவுறுத்தியுள்ளதால் பலரும் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோரை பாராட்டி வருகிறார்கள்.