போட்டியில் வெற்றி பெற்றாலும் சோகம்…நிதிஷ் ராணாவுக்கு வந்த சோதனை.!!

ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் கடைசி ஓவர் முடிவில் பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. நிதிஷ் ராணாவின் அரை சதம் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் அனல் பறக்கும் ஆட்டத்தால் கொல்கத்தா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியில் பெற்றாலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு சோகம் தான். ஏனென்றால், நேற்றைய போட்டியில் தாமதமாக பந்து வீசப்பட்டதால் அவருக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்தது.
ஐபிஎல் நடத்தை விதிகளின் படி, குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவேண்டும். எனவே, நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி மெதுவான ஓவர் வீதத்தை கடைபிடித்ததால், அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரது, போட்டி கட்டணத்தில் இருந்து ரூ. 12 லட்சம் குறைக்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025