தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தோல்வி!

தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தோல்வி அடைந்தார். கர்நாடக மாநிலம் சிக்கமங்களூரு தொகுதியில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தம்மையா 8,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடக தேர்தலில் இதுவரை 91 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று , 45 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதுபோன்று, பாஜக 45 இடங்களில் வெற்றி பெற்று, 19 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும், மதசார்பற்ற ஜனதாதளம் 15 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.