மணிப்பூர் வன்முறை…இறந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு..!!

Death toll in Manipur

மணிப்பூரில் வன்முறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளார். 

கடந்த சில நாட்களாக மணிப்பூர் மாநிலத்தில் பயங்கர கலவரம் நடந்து வருகிறது. குக்கி மற்றும் மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட இந்த மோதல், வன்முறையாக மாறியது. இந்த கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன.

மாநிலத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து மே 3 அன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், மணிப்பூரில் நடந்த மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முன்னதாக 58 என கூறப்பட்ட நிலையில், தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

வன்முறையின் போது 71 பேர் உயிரிழந்தனர் என்றும், 230-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் 1700க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன. தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ள தகவலை மணிப்பூர் அரசாங்கத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் “மணிப்பூரில் நிலைமை தற்போது மேம்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவு தளர்வு இப்போது 7 மணிநேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 45,000 பேர் வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கூடுதல் விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை மற்றும் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகள் இல்லை” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்