இமாலய வெற்றி! மாநில தலைவரை எதிர்த்து போட்டியிட்ட 14 வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பு!

DK Shivakumar

75.03% வாக்குகளைப் பெற்று இமாலய வெற்றியை பதிவு செய்தார் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார்.

கர்நாடக மாநிலம் சட்டப்பேரவை தேர்தலில் கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் 1,22,392 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கனகபுரா தொகுதியில் பதிவான வாக்குகளில் 75.03% வாக்குகளைப் பெற்று இமாலய வெற்றியை பதிவு செய்தார் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார்.

அதன்படி, டி.கே.சிவக்குமார் 1,43,023 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். டி.கே.சிவக்குமாரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக் 19,753 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார். பாஜக அமைச்சர் அசோக்கு 10.36% வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் நாகராஜு 20,631 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை எதிர்த்துப் போட்டியிட்ட அமைச்சர் அசோக் உள்ளிட்ட 14 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். கர்நாடகாவில் இதுவரை காங்கிரஸ் 108 இடங்களில் வெற்றி பெற்று, 28 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 50 இடங்களில் வெற்றி பெற்று, 14 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்