மத்திய அரசு வேலை… 9 லட்சம் மோசடி.! பாஜக மாவட்ட தலைவர் அதிரடி கைது.!

Arrest

மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 9 லட்சம் மோசடி செய்த பாஜக மாவட்ட தலைவர் வி.கே.சுரேஷ் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சிவகாசியை சேர்ந்த பாஜக நிர்வாகி பாண்டியன் என்பவர் தனது மகனுக்கு மத்திய அரசு வேலை கேட்டு, விருதுநகர் மாவட்ட பாஜக செயலாளர் வி.கே.சுரேஷிடம் 11 லட்சம் பணம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், ஆண்டுகள் கடந்தும் வேலை பற்றி எதுவும் தகவல் தெரியாத காரணத்தால் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதில் 2 லட்சம் பணத்தை மட்டும் திருப்பி கொடுத்துள்ளார் வி.கே.சுரேஷ்.

இதனால், மீதி பணம் 9 லட்சம் தரவில்லை என கூறி, விருதுநகர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் பாஜக நிர்வாகி பாண்டியன். ஏற்கனவே இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்று இருந்த வி.கே.சுரேஷ். நீதிமன்ற நிபந்தனை படி, பணம் திருப்பி செலுத்தாத காரணத்தால், விருதுநகர் காவல்துறையினர்,  வி.கே.சுரேஷை அவரது வீட்டில் கைது செய்து விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே பாஜக நிர்வாகி கலையரசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்