#BREAKING: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு அலுவலர்கள், ஆசியர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி ஏப்ரல் 1 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர் என்றுள்ளனர்.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/zMeDwyobN0
— TN DIPR (@TNDIPRNEWS) May 17, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!
July 30, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 30, 2025