கொல மாஸ்…. “தளபதி 68” படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தளபதி விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 68ல்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது, விஜய் நடித்து வரும் லியோ படத்தை தொடர்ந்து, அவர் நடிக்கும் அடுத்த படத்தை யார் இயக்க உள்ளார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அதில் 4 இயக்குனர்களின் பெயர் இணையத்தளத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புதுவித காம்போவாக இருக்க போகிறது, பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது.

இதுபற்றி விஜய் தனது ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில், படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், யுவன்சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next… pic.twitter.com/iw1M5Dy7x9
— Vijay (@actorvijay) May 21, 2023
அதன்படி பார்த்தால், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் சொந்தக்காரர்களான கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தளபதி விஜய்யுடன் இணையும் 25வது தயாரிப்பு முயற்சி ஆகும்.

இப்போது, ‘பிகில்’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட், தளபதி விஜய்யுடன் 2வது முறையாக இணைந்துள்ளனர். படத்திற்கான தலைப்பு அறிவிப்புடன் நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
லேட்டஸ்ட் செய்திகள்
”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!
July 8, 2025
“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!
July 8, 2025