இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கிட் ஸ்பான்சர் அறிவிப்பு..!

NewKitSponsor

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ்(adidas) நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ்(adidas) நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஆகியுள்ளது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இதன் மூலம், இந்திய அணி விளையாடும் போட்டிகளில் அணியின் ஜெர்சியில் மேல் புறத்தில் அடிடாஸ் நிறுவனத்தின் பெயர் இருக்கும்.

அடிடாஸ் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் தொகை என்னவென்று குறிப்பிடவில்லை. அடிடாஸ் அடுத்த மாதம் முதல் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சிகளை ஸ்பான்சர் செய்யத் தொடங்கும். அடிடாஸ் முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஸ்பான்சர் செய்தது.

முன்பு இந்திய அணிக்கு கிட் ஸ்பான்சராக இருந்த எம்பிஎல்-லிடம் (MPL) ரூ.370 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. மேலும், இந்திய அணிக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC Final 2023) போட்டிகள் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்