கருமுத்து கண்ணன் மறைவால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்…இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்.!!

mk stalin and Karumuthu Kannan

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணனின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கருமுத்து கண்ணன் 18 ஆண்டுகளாக தக்காராக இருந்தவர். இவர் கடந்த சில நாட்களாகவே  உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருடைய மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் பிரபலங்கள், மக்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில் ” மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் தக்கார் கருமுத்து கண்ணன் அவர்கள் மறைந்த செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழில்துறை, கல்வித்துறை, கோயில் திருப்பணிகள் என அனைத்திலும் சிறந்து விளங்கி, பலருக்கும் உதவிகள் செய்த உயர்ந்த உள்ளம் கொண்ட கருமுத்து கண்ணன் அவர்களின் மறைவு பேரிழப்பு. அவரது மறைவினால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், கருமுத்து கண்ணன் தியாகராஜர் மேலாண்மைக் கல்லூரி, கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்